1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (23:18 IST)

1 முதல் 9 வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு - புதுச்சேரி அரசு

புதுச்சேரி மாநிலத்தில்  1 முதல் 9 வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பள்ளிகள் நடந்த நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடக்கும் என கேள்வி எழுந்த நிலையில், புதுச்சேரி மா நிலத்தில்  1 முதல் 9 வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.