1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vellore collector order not allowed cellphone in classroom

வகுப்பறைகளுக்குள் செல்போன் எடுத்து வர தடை: வேலூர் கலெக்டர் உத்தரவு

cellphone
மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்போன் எடுத்து வர தடை என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் என்பவர் வெளியிட்டுள்ள உத்தரவில் வகுப்பறைகளுக்குள் மாணவர்கள் செல்போன்கள் எடுத்து வரக்கூடாது என்றும் மீறி எடுத்து வந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதி மறுத்ததை அடுத்து மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேசை நாற்காலிகளை போட்டு உடைத்தனர் என்பதும் செல்போனில் எடுக்கப்பட்ட இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கொடுத்த பணத்தை கேட்டால் ஆபாச பட மிரட்டல்! – பேராசிரியரை மிரட்டிய 4 பேர் கைது!