புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (15:03 IST)

இது அடிமை ஆட்சி அல்ல... உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்ன வாக்குறுதியை காப்பாற்றுகிறோம் என உதயநிதி ஸ்டாலின் பேட்டி. 

 
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்றே ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கரூரில் தேர்தல் பரப்புரையின் போது பின்வருமாறு பேசினார், 
 
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகிறது. கவர்னர் நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை திருப்பி அனுப்பியதற்கு உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பி உள்ளோம். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக ஓயாது.
 
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்ன வாக்குறுதியை காப்பாற்றுகிறோம். அதிமுக ஆட்சி போல அடிமை ஆட்சி அல்ல இந்த ஆட்சி, மக்களுக்கான ஆட்சி, சமூக நீதிக்கான ஆட்சி. கலைஞர் வழிவந்த மு.க. ஸ்டாலின் ஆட்சி. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை எல்லா விதமான சட்ட போராட்டங்களையும் நடத்துவோம் என்று கூறினார்.