செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (21:46 IST)

மக்களுக்காக அதிமுக பல நுற்றாண்டுகள் இயங்க வேண்டும் என்பதே ஜெ. கனவு - ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ்!

இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர். 
 
அந்த கூற்றத்தில்,  ஒற்றுமையோடு தேர்தல் பணியாற்றி வெற்றியை ஈட்டுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் மக்களுக்காக அதிமுக பல நுற்றாண்டுகள் இயங்க வேண்டும் என்பதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு என ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் தெரிவித்தனர். 
 
மேலும்  கட்சியினர் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அரசின் சாதனைகளை பிரச்சாரம் மூலம் மக்களிடம் சேர்க்க வேண்டும் எனவும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.