அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளை பேணி பாதுகாக்க உறுதியேற்றுக் கொண்டார்.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவ படத்துக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்
கூறியிருப்பதாவது:
அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்\" என்று பதிவிட்டுள்ளார்..
Edited by Mahendran