வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (15:25 IST)

சசிகலா வருகை: டிஜிபியிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் மீண்டும் மனு!

ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக் காலம் முடிந்த நிலையில் சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா வரும் 8 ஆம் தேதி தமிழக வரவுள்ளார்.
 
அவருக்கு சென்னையில் 12 இடங்களில் வரவேற்பு அளிக்க தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர். சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், நாளை மறுநாள் அவர் வரும் போது, சென்னையில் பேரணி நடத்த அமமுக திட்டமிட்டுள்ளது. 
 
இதற்காக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் வருகை தந்து சசிகலா பெங்களூரில் இருந்து வரும் போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக புகாரளிக்க உள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.