தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!
கடந்த 17ஆம் தேதி மறைந்த முன்னாள் மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு,
செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி .....
மறைந்த மலரவன், கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்த காலத்தில், பல்வேறு கோவை நகரின் வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்தவர் என புகழாரம் சூட்டினார்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டி வருவதாகவும், இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்றார்.
கர்நாடக அரசும் மேக தாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி இருப்பதாகவும், இதே போல் ஆந்திரா அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார். அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடி நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்ததாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டியதாகவும், அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டதாக குற்றம் சாட்டினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்குகளை திமுக அரசு திட்டமிட்டு நீக்கி உள்ளதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது.
தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 40 இடங்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.