செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (11:16 IST)

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

RP Udayakumar
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் உண்மையில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
 
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும் என்று விமர்சித்தார் அண்ணாமலை பேச்செல்லாம் பொய்யானது, அவர் கர்நாடகாவில் என்ன பேசினார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் என்றும் தனது கட்சியோடு கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டையே பட்டா போட்டு தருவதாக கூறினார்கள் என்றும் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
 
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்பட உள்ளதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்ட ஓபிஎஸ்சை எந்த வகையில் ஏற்க முடியும்? பதவி பறிபோகிறது என்பதால் கட்சி பிரிவுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது ஓபிஎஸ்தான் என்று ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

 
அதிமுக தனது வரலாற்றில் அதிக அளவில் வழக்குகளை சந்தித்ததில்லை என்றும் தற்போது அதிமுக ஏராளமான வழக்குகளை சந்திக்க வைத்தவர் ஓ.பன்னீர் செல்வம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  இவர் தனது சுய லாபத்துக்காகவும் பதவிக்காகவும் அதிமுக மீது பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்தார் என்று ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.