1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 மே 2024 (13:24 IST)

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நான் பார்த்து மகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி என்று அவரது வீடியோவுக்கு கமெண்ட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரெதிர் கூட்டணியில் உள்ளது என்பதும் திமுக கூட்டணியில் தான் கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் உள்ளது என்பதும் இதனால் அதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து ’நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி என்று பதிவு செய்துள்ளார். 
 
இந்த பதிவு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்த போது ’காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் எளிமையாக யார் இருந்தாலும் அவர்களை நான் பாராட்டுவேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். 
 
ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு அவர் சமீபத்தில் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva