1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. After one year father and son meet

ஒன்றரை வருடத்திற்கு முன் வீட்டை வீட்டு ஓடிய மாணவன் கண்டுபிடிப்பு: நெகிழ்ச்சியான சந்திப்பு!

father son
ஒன்றரை வருடத்திற்கு முன் வீட்டை வீட்டு ஓடிய மாணவன் கண்டுபிடிப்பு: நெகிழ்ச்சியான சந்திப்பு!
ஒன்றரை வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிய பத்தாம் வகுப்பு படித்த மாணவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து தந்தை மகன் நெகிழ்ச்சியான சந்திப்பு நடந்துள்ளது 
 
திருவாரூர் பகுதியில் உள்ள இளவங்கர்குடி என்ற பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் மாதேஷ் பெற்றோர் சரியாக படிக்கவில்லை என திட்டியதால் வீட்டை விட்டு ஓடி விட்டார் 
 
அவர் மும்பை அங்கு சென்றுள்ள நிலையில் அங்கு அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மும்பையில் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க மாதேஷ் விண்ணப்பம் கொடுத்த போது அந்த அட்டையின் மூலம் போலீசார் அவர் மும்பையில் இருப்பதை கண்டுபிடித்தனர்
 
இதனை அடுத்து மும்பை சென்று அவரை அழைத்து வந்து அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் தந்தை மகன் சந்திப்பு நடந்ததை அடுத்து இருவரும் கட்டி பிடித்துக்கொண்டு நெகிழ்ச்சியாக கண்ணீர் விட்டு கதறி அழுது தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல்: உருக்குலைந்த உக்ரைன்