திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (10:23 IST)

நடிகர் மம்மூட்டியை விமர்சிக்கும் கீர்த்தி சுரேஷின் தந்தை… பின்னணி என்ன?

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசிக்கு மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஸ்ரீநாத் பாசி. அவர் நடித்துள்ள சட்டம்பி என்ற படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் கலந்துகொண்ட போது ஒரு யுட்யூப் சேனல் தொகுப்பாளினி கேட்ட முட்டாள்தனமான ஒரு கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். மேலும் அவரிடம் தகாத வார்த்தைகளை பிரயோகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அவர் அளித்த புகாரில் போலிஸார் ஸ்ரீநாத்தை கைது செய்தனர். மேலும் இப்போது அவர் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அளித்த புகாரின் படி ஸ்ரீநாத் புதுப் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படங்களில் நடிக்க தடையில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மம்மூட்டியிடம் இந்த தடை குறித்து கேட்ட போது “யாராக இருந்தாலும், அவரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக இத்தகையை தடை விதிக்கக் கூடாது” எனக் கூறியிருந்தார்.

மம்மூட்டியின் இந்த கருத்தை விமர்சித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் குமார். இதுபற்றி அவர் “நடிகர்களுக்கு மட்டும்தான் வாழ்வாதார பிரச்சனையா?... தயாரிப்பாளர்களுக்கு இல்லையா?... தயாரிப்பாளர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து முழு விவரம் தெரியாமல் இப்படி பேசுவது சரியானது இல்லை. யாரால் தொடர்ந்து பிரச்சனைகள் உருவாகிறதோ அவர்கள் மீதுதானே நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.