படிப்பு எதுக்கு ? உழைப்பு எதுக்கு? நடிகை கஸ்தூரி டிவீட்
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தற்போது, சினிமாவில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்திரு வருவதுடன், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும், ஆக்டிவாக இருந்து வருவதால், ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதுடன், சில பதிவுகள் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், பெரியாரின் பற்றாளர் ஒருவர் தன் டுவிட்டர் பக்கத்தில்க், தமிழ் அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் பகுத்தறிவுவாதி என்று பதிவிட்டு, படிக்காமல், சரஸ்வதியை கும்பிட்டாலும் உழைக்காமல் லெட்சுமை கும்பிட்டாலும் கல்வியும் கிடைக்காது. செல்வமும் கிடைக்காது. பொறியும் சுண்டலும்தான் கிடைக்கும் என்ற பெரியாரின் தந்துவாத்தை பதிவிட்டுருந்தார்.
இதற்கு, நடிகை கஸ்தூரி தன் டுவிட்டர் பக்கத்தில், ''படிப்பு எதுக்கு ? உழைப்பு எதுக்கு? பெரியார் மண்ணில் 18 வருஷம் உயிரோடு இருந்தாலே போதும்- உள்ளாட்சி சட்டமன்றம் பாராளுமன்றம் தேர்தல் பேரணி மறியல் இப்படி அடிக்கடி குவாட்டரும் பிரியாணியும் நிறைய பணமும் கிடைக்கும்!'' #Periyarmann #pagutharivuLogic என்று பதிவிட்டுள்ளார்.