ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல்: உருக்குலைந்த உக்ரைன்
ஒரே நாளில் உக்ரைன் மீது ரஷ்யா 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து உக்ரைன் நாடு உருக்குலைந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது என்பதும் இந்த தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் சேதம் அடைந்து ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 40 நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் உருக்குலைந்து போய் இருப்பதாகவும் ஏராளமானோர் காயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் தான் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது
Edited by Siva