வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (18:36 IST)

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

சற்று முன்பு கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார் ராஜினாமா செய்த நிலையில் தற்போது நெல்லை நகர் சரவணன் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு மேயர்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கோவை நேயர் கல்பனா ஆனந்த் குமார் என்பவர் ராஜினாமா செய்ததாகவும் திமுகவினர் மத்தியில் அதிருப்தி இருந்ததால் அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நெல்லை மகன் சரவணன் சற்று முன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை அவர் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
 
தனிப்பட்ட காரணம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக கோவை மேயர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்ட நிலையில் அதே காரணம் தான் தற்போது நெல்லை மேயருக்கும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நெல்லை மேயர் ராஜினாமா செய்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva