1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain chances in nilagiri and kovai districts

நீலகிரி, கோவை மலை பகுதியில் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

rain red umbrella
"நீலகிரி, கோவை மலை பகுதியில் இன்றைய தினம் கனமழை  முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
மேலும் இன்றைய தினம் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மலை பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு  என்றும், இன்றைய தினம் திருநெல்வேலி, கன்னியாகுமரி மலை பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல் நாளைய தினம் நீலகிரி, கோவை மலை பகுதியில் ஓரிரு இடங்களில்  கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஏற்கனவே நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளதை அடுத்து சில இடங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran