1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (16:29 IST)

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!

ஒன்றிய அரசின் எல்லா நிறுவனங்களும் ஒன்றிய அரசின் கைப்பாவையாக தான் உள்ளது.
 
இருந்த போதும் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகவே அதிமுக சிபிஐ விசாரணை கேட்கிறது.
 
மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியாது என முதலமைச்சர் கூறுவது உண்மைக்கு புறம்பானது.
 
தேவைப்பட்டால் ஜாதிவாரி கணக்கு எடுப்பை மாநில அரசு எடுக்கலாம் என அரசியலமைப்பு  அனுமதி வழங்கி உள்ளது.
 
தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய மதிப்பளிக்க வேண்டும் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.