வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 செப்டம்பர் 2018 (08:20 IST)

அபிராமியை வெளியே விடாதிங்க: போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் மனு

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ வேண்டும் என்பதற்காக கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்ய முயன்றார் சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண். இவருடைய இந்த முயற்சியில் கணவர் விஜய் அதிர்ஷ்டவசமாக தப்பிக்க இரண்டு குழந்தைகள் பரிதாபமாக மரணம் அடைந்தன.

பெண் குலத்திற்கே இழுக்காக அமைந்த அபிராமியின் இந்த செயலால் அவருடைய பெற்றோர் மற்றும் கணவர் அபிராமியின் மிது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் கள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்த அபிராமிக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் ஒருவர்  புகார் செய்துள்ளார். அந்த புகாரில் அபிராமிக்கு எதிராக குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும், அபிராமிக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்றும், அபிராமி சிறைக்குள் இருக்கும் நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அவருக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுளார்.