தொடர்புடைய செய்திகள்
- திரையரங்குகளில் அதிக விலையில் உணவுப்பொருள் விற்பனை: தொழிலாளர் துறை எச்சரிக்கை
- பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நாடு தழுவிய முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு
- வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு - புதிய உச்சத்தை தொட்டது
- பட்ஜெட் போன் டூ காஸ்ட்லி போன்: ரெட்மி விலை உயர்வு
- பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கெல்லாம் அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை - மத்திய அமைச்சரின் திமிர் பேச்சு
உச்சத்தில் பெட்ரோல் விலை: இனி பைக்ல போக முடியாது, பஸ்லதான் போகணும்:
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டு வரும் நிலையில் இன்று திடீரென பெட்ரோல் விலை 41 காசுகளூம், டீசல் விலை 47 காசுகளும் அதிகரித்துள்ளதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83.54 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 76.64 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலையானது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 41 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 47 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் விலை தினந்தோறும் ஏறிக்கொண்டே வருவதால் இனி நடுத்தர வர்க்கத்தினர் பைக்கை மறந்துவிட்டு பஸ்ஸில் தான் செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் டீசல் விலையேற்றத்தினால் ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோக்களின் கட்டணமும் உயரும் அபாயம் இருப்பதால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
