1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK ship will escape from Dinakaran Tsunami?

கரை சேருமா அதிமுக கப்பல்? கரை சேர்ந்தாலும் மக்களுக்கு பயன் அளிக்குமா?

ADMK
அதிமுக என்னும் கப்பல் தற்போது நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருக்கின்றது. இந்த கப்பலை கரை சேர்க்க கேப்டன் ஈபிஎஸ், துணை கேப்டன் ஓபிஎஸ் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வந்தாலும், தினகரன் என்னும் சுனாமியில் இருந்து தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



 
 
இந்த நிலையில் அதிமுக அரசு இன்னும் நான்கு வருடங்கள் இருப்பதால் இப்போதைக்கு இந்த கப்பலுக்கு ஆபத்தில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் இந்த கப்பல் தத்தி தடுமாறி கரை சேர்ந்தாலும் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இருக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
நான்கு வருடங்களும் ஆட்சியை காப்பாற்றவே ஆள்பவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும் பொதுமக்கள் நலனில் எந்தவித அக்கறையும் இருக்காது என்றே கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு பயனளிக்காத கப்பல் இருந்தால் என்ன, கவிழ்ந்தால் என்ன என்பதுதான் தற்போது மக்களின் மனநிலை உள்ளது.
அடுத்த கட்டுரையில்
அமித்ஷா தமிழக வருகை ரத்து: உண்மையான காரணம் என்ன?