1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Sex Racket Busted at Luxury Resort Near Jim Corbett; 52 Arrested, 10 Women Rescued

தொழிலதிபர் நடத்திய விருந்து.. சிறுமி உள்பட 10 பெண்களை கஸ்டமர்களுக்கு விருந்தாக்கிய அதிர்ச்சி சம்பவம்.. 52 பேர் கைது...

ஜிம் கார்பெட்
உத்தரகண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா அருகே உள்ள ராம்நகரில் அமைந்துள்ள ஒரு சொகுசு விடுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்து முறியடித்துள்ளனர்.
 
 மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு , சிறப்புச் செயல்பாட்டுக் குழு மற்றும் ராம்நகர் காவல்துறையினர் இணைந்து நடத்திய இந்த அதிரடி சோதனையில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒரு சிறுமி உட்பட 10 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
 
பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெண்களை அழைத்து வந்து, சுற்றுலா என்ற பெயரில் இங்கு விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. 
 
சோதனையின் போது, அங்கு மது விருந்துடன் ஆபாச நடனங்கள் அரங்கேறியதும், விருந்தினர்கள் பெண்கள் மீது பணத்தை வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், பல ஆட்சேபனைக்குரிய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
மீரட்டைச் சேர்ந்த தொழிலதிபரான உமேந்திர குமார் என்பவர்தான் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். தனது பூச்சிக்கொல்லி மருந்து வியாபாரம் தொடர்பான நபர்களை மகிழ்விப்பதற்காக, ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சுமார் ரூ.2.20 லட்சம் செலவில் இந்த விடுதியை அவர் முன்பதிவு செய்துள்ளார். இதற்காக ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.10,000 பேரம் பேசப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இந்த சட்டவிரோத செயலை மறைப்பதற்காக, விருந்தினர்கள் மற்றும் பெண்களின் பெயர்களை பதிவேட்டில் குறிப்பிட வேண்டாம் என விடுதியின் பொது மேலாளர் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆதாரங்களை மறைக்க முயன்ற குற்றத்திற்காக அந்த சொகுசு விடுதிக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் விபச்சாரத் தடுப்புச் சட்டம், கலால் சட்டம் மற்றும் சிறுவர் நீதிச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
15 வருசத்துக்கு அப்புறம் சம்பவம்!.. ராஜ்மோகனை அமெரிக்காவுக்கு அனுப்பிய விஜய்!..