1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay planning for world tamil conferrence

15 வருசத்துக்கு அப்புறம் சம்பவம்!.. ராஜ்மோகனை அமெரிக்காவுக்கு அனுப்பிய விஜய்!..

raj mohan
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி மலர்ந்திருக்கிறது, முன்னாள் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக மாறியுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்து 55 நாட்கள் முடிந்துவிட்டது. பல விமர்சனங்களை சந்தித்தாலும் ஆட்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்கிற முயற்சியில் தமிழக முதல்வர் விஜய் பல திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார்..

இந்நிலையில்தான் தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ் மாநாடு நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டிருக்கிறார். இந்த தொடர்பாக ஆலோசனை நடத்த அமைச்சர் ராஜ்மோகனை முதலமைச்சர் விஜய் அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கிறார். கடைசியாக 2010ம் வருடம் திமுக ஆட்சியில் இருந்தபோது கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அதன் பின் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் உலகத்தமிழ் மாநாடு நடக்கவிருக்கிறது..

இந்த மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமில்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் இந்த மாநாடு நடக்கவிருக்கிறது.