திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (22:13 IST)

நான் தான் அடுத்த முதலமைச்சர்: நாஞ்சில் சம்பத் அதிரடி

தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் சிலசமயம் அளவுக்கு அதிகமாக தினகரனை போற்றி புகழ்ந்து வருவதை பார்த்தபோதே பலருக்கு சந்தேகம் எழுந்தது. ஜெயலலிதாவைவிட, எம்ஜிஆரை விட தினகரன் தான் அரசியல் ஞானி என்று வாய்கூசாமல் புகழ்ந்ததை அதிமுக தொண்டர்களே ரசிக்கவில்லை



 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், 'எங்களுக்கு அட்சியை கவிழ்க்கும் எண்ணம் சிறிதும் இல்லை. இது எங்களுடைய ஆட்சி. எங்களுக்கு 100க்கும் அதிகமானோர் ஆதரவு உள்ளது. எங்களது ஒரே கோரிக்கை துரோகி பன்னீர்செல்வத்தை அமைச்சரவையில் இணைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்பதுதான் என்று கூறினார்
 
அப்போது 'பழனிச்சாமி பதவி விலகினால் யார் அடுத்த முதல்வர் என்ற நிருபரின் கேள்விக்கு, 'ஏன் நான் கூட முதலமைச்சர் ஆகலாம்' என்று கூறியவுடன் நிருபர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. காமெடிக்கு இவ்வாறு கூறினாரா? அல்லது சீரியஸாக கூறினரா? என்று தெரியவில்லை. ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையை பார்த்தால் யார் வேண்டுமானாலும் முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை