வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (13:34 IST)

ஓபிஎஸ்-ஐ சந்தித்த அதிமுக சீனியர் தலைவர்.. ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதா பாஜக..!

ADMK
அதிமுகவின் சீனியர் தலைவர் ஒருவர் ஓ பன்னீர்செல்வதை சந்தித்ததாக கூறப்படுவதால் இது பாஜகவின் பின்னணியாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
பாஜகவுடன் இனி கூட்டணியில்லை என அதிமுக உறுதிபட கூறிவிட்டதை அடுத்து அதிமுகவுடன் பாஜக தலைமை சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் ஆனால் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாக அதிமுக கூறியதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக அதிமுகவை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அதிமுக சீனியர் தலைவரிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த சீனியர் தலைவர் சமீபத்தில் ரகசியமாக ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததாகவும் அடுத்து ஒரு சில நாட்களில் சில திடீர் திருப்பங்கள் அதிமுகவில் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால்  எந்த சதி திட்டம் தீட்டினாலும் தொண்டர்களும் கட்சியும் தான் பக்கம் இருப்பதால் தனக்கு கவலை இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தைரியமாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran