வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 மே 2023 (16:05 IST)

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: அதிமுக, பாமக, தமாக எம்பிக்கள் பங்கேற்பு..!

புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழா வரும் 28ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் திமுக உள்பட 18 கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் அதிமுக, பாமக மற்றும் தமாக ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 மே 28ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் அதிமுக சார்பில் அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி சண்முகம், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதேபோல் மக்களவை எம்பி ரவிந்திரகுமார் மாநிலங்களவை எம்பி தர்மர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்
 
மேலும் பாமக சார்பில் அன்புமணி கலந்து கொள்வார் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்பட அனைத்து கட்சிகளும் இந்த விழாவை புறக்கணித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran