திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 மே 2023 (17:46 IST)

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்போம்: அதிமுக அறிவிப்பு

ADMK
திமுக உள்பட 19 எதிர்கட்சிகள் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்போம் என அறிவித்துள்ள நிலையில் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்போம் என அதிமுக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வரும் 28ஆம் தேதி டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி திறந்து வைக்கும் இந்த விழாவில் பாஜகவை சேர்ந்த அனைத்து எம்பிகளும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் திமுக உள்பட 19 எதிர்கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக சார்பில் பாராளுமன்ற கட்டிட விழாவில் பங்கேற்போம் என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் அதிமுக சார்பில் தம்பிதுரை, சண்முகம் ஆகிய அதிமுக எம்பிக்கள் கலந்து கொள்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran