1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk mlas ready to supporting tvk

தவெகவுக்கு ஆதரவளிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள்?!.. கேட்பதை கொடுப்பாரா விஜய்?..

eps vijay
கடந்த 50 வருடங்களுக்கு மேல் தமிழகத்தை அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆண்டு வந்த நிலையில் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்தபின் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்களும் திருப்பங்களும் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சியாக கூட வராமல் அதிமுக 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது.

குறிப்பாக தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமை மீது அதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். கடந்து சில நாட்களாகவே எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் அதிமுகவில் தனித்து செயல்பட்டு வருகிறார்கள். 30 எம்.எல்.ஏக்கள் அவர்கள் பக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நேற்று கூட அதிமுக சட்டமன்ற தலைவராக எஸ்பி வேலுமணியை தேர்ந்தெடுக்க வேண்டுமென 30 அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் மனு கொடுத்தனர். எனவே மீதமுள்ள 17 எம்எல்ஏக்கள்தான் பழனிச்சாமி பக்கம் இருக்கிறார்கள். இதையடுத்து அதிமுக இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது..

இந்நிலையில், சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  தவெகவுக்கு ஆதரவளிக்கும் முடிவை விரைவில் சிவி சண்முகம் அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.  

அதிமுக எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு சண்முகம் பக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அதிமுக இரண்டாக உடைந்து அதில் பெரும்பகுதி தவெக பக்கம் வருவதால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. அதேநேரம், அதிமுக எம்எல்ஏ ஆதரவு கொடுத்தால் அதை விஜய் ஏற்றுக் கொள்வாரா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனெனில் கண்டிப்பாக சிவி சண்முகம், வேலுமணி உள்ளிட்ட சிலருக்கு அமைச்சர் பதவிகளை கேட்பார்கள். தவெக என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அடுத்த கட்டுரையில்
விஜய் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதில்லை: மது பிரியர்கள் மகிழ்ச்சி