1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK MLA Karunass shows his support for TTV Dhinakaran

முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்ற கருணாஸ்

அதிமுக
ஏற்கனவே 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தற்போது கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 

 
ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்ததை அடுத்து தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுக கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
 
டிடிவி தினகரன் அணியில் இருக்கும் தங்க தமிழ்செல்வன், தங்களுக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது கருணாஸ், ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் முதல்வருக்கான ஆதாரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
 
இதனால் தற்போது டிடிவி தினகரன் அணிக்கு வெளிப்படையாக 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வுக்கு எதிராக அரசு வேலையை தூக்கி எறிந்த ஆசிரியை...