1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dinakaran Going to Meet Governor

ஆளுநரை சந்திக்க இருக்கும் தினகரன்: கலக்கத்தில் எடப்பாடி!

ஆளுநரை சந்திக்க இருக்கும் தினகரன்: கலக்கத்தில் எடப்பாடி!

ஆளுநர்
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குறிப்பிட்ட சில எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு போர்க்கொடி தூக்கியுள்ள டிடிவி தினகரனால் தற்போது அதிமுக தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தினகரன் தமிழக ஆளுநரையும் சந்திக்க உள்ளார்.


 
 
அதிமுகவின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்று சேர்ந்ததை அடுத்து தினகரன் அணியினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர்.
 
இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 16 நாட்களாக அவர்கள் புதுச்சேரியில் உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில் தினகரன் தலைமையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரை நாளை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆளுநர் இவர்களுக்கு நேரம் ஒதுக்கி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் எடப்பாடி தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
அனிதா பெயரில் அரியலூரில் மருத்துவமனை - ஆனந்தராஜ் அதிரடி