தொடர்புடைய செய்திகள்
- சசிக்கலாவை இணைக்கும் விவகாரம்! – அதிமுக முக்கிய கூட்டம் திடீர் ரத்து!
- அமைச்சர் தொகுதியில் காற்றில் பறந்த விதிமுறைகள்
- நான் கோழை அல்ல ஒரு போராளி - முதல்வர் மம்தா பானர்ஜி
- தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன்? பாஜக தலைவர் கேள்வி
- நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும்- முதல்வர் குமாரசாமி
சசிக்கலாவுக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்கள்! – விருதுநகரில் போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்!
சசிக்கலாவை அதிமுகவில் சேர்க்க அதிமுகவினர் பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.
அதிமுக உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அதிமுக தலைமை மீது கட்சிக்குள்ளேயே புகார்கள் எழுந்துள்ளது. பலரும் சசிக்கலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என நேரடியாகவே வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் செயல்வீரர் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் சசிக்கலா விவகாரம் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க கோரி அதிமுகவினர் நேரடியாக போஸ்டர் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.
விருதுநகரில் போஸ்டர் ஒட்டியுள்ள அதிமுகவினர் “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என குறிப்பிட்டு சசிக்கலா படத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
