செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (10:04 IST)

சசிக்கலாவை இணைக்கும் விவகாரம்! – அதிமுக முக்கிய கூட்டம் திடீர் ரத்து!

அதிமுகவில் சசிக்கலாவை மீண்டும் சேர்க்க பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் நாளை நடக்கவிருந்த அதிமுக கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அதிமுக தலைமை மீது கட்சிக்குள்ளேயே புகார்கள் எழுந்துள்ளது. பலரும் சசிக்கலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என நேரடியாகவே வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் செயல்வீரர் கூட்டம் நடைபெற இருந்தது. அதில் சசிக்கலாவை கட்சியில் சேர்க்கும் கோரிக்கைகள் விடுக்கப்படலாம் என பேசிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது நாளை நடைபெற இருந்த கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.