1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK members investigating about General Council Chennai

பொதுக்கூட்டம் நடக்குமா? ஸ்ரீவாரு மண்டபத்திற்கு அதிமுக நிர்வாகிகள் ஆய்வு!

அதிமுக
பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு அதிமுக நிர்வாகிகள் செல்கின்றனர். 

 
அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி அணி கூறி வரும் நிலையில், ஒற்றைத் தலைமை தேவையில்லை என ஓபிஎஸ் அணியினர் மறுத்து வருகின்றனர். மேலும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் அணி கூறி வருகின்றது.
 
ஆனால் எடப்பாடியார் அணியோ பொதுக்குழு எடுக்கும் முடிவுதான் ஒற்றைத் தலைமையை தீர்மானிக்கும் என கூறி வருகிறது. ஒற்றைத் தலைமையை கொண்டு வருவதற்கான அனைத்துக்கட்ட பணிகளையும், பேச்சுவார்த்தையையும் எடப்பாடி பழனிசாமி முடித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க எடப்பாடிக்கு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார். நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே நிர்ணயித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும். அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்க்கு எழுதிய கடிதம் ஈபிஎஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு அதிமுக நிர்வாகிகள் செல்கின்றனர். ஆம், நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு சென்று ஆய்வு நடத்துகின்றனர்.    
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் - ஓபிஎஸ் கடிதம் நிராகரிப்பு??