செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (11:09 IST)

முட்டிக் கொள்ளும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்! நாட்டாமை செய்யும் ஜெயக்குமார்??

அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்கிறார் ஜெயகுமார்?
அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே முரண்பாடு எழுந்துள்ள நிலையில் பேச்சுவார்த்தை நடத்த ஜெயக்குமார் முயன்று வருகிறார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி அணி கூறி வரும் நிலையில், ஒற்றைத் தலைமை தேவையில்லை என ஓபிஎஸ் அணியினர் மறுத்து வருகின்றனர். மேலும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் அணி கூறி வருகின்றது.

ஆனால் எடப்பாடியார் அணியோ பொதுக்குழு எடுக்கும் முடிவுதான் ஒற்றைத் தலைமையை தீர்மானிக்கும் என கூறி வருகிறது. ஒற்றைத் தலைமையை கொண்டு வருவதற்கான அனைத்துக்கட்ட பணிகளையும், பேச்சுவார்த்தையையும் எடப்பாடி பழனிசாமி முடித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “அதிமுக உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முடிவில் உள்ளனர். அதற்காக ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்படுகிறார் என்பது தவறான குற்றச்சாட்டு. எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் எனது வீட்டுக்கு வந்தால் அதிமுக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிடலாம்” என பேசியுள்ளார்.