1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK members fight in sattur

தலைவருக்கு நான்தான் மரியாதை செய்வேன்! – எடப்பாடியாரால் எக்குதப்பாக மோதிய அதிமுகவினர்!

Tamilnadu
சாத்தூர் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதை அளிப்பதில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி 9 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சாத்தூர் வழியே சென்றபோது அவருக்கு அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதை செய்வதில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் ஆதரவாளர்களுக்கும், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜவர்மன் ஆட்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலான நிலையில் போலீஸார் இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சாப்பாடு வேணுமா.. போய் தடுப்பூசி போட்டு வாங்க! – குஜராத்தில் அதிரடி உத்தரவு!