திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (09:42 IST)

ஹோம் ஏன் ஒழுங்கா செய்யல..? – பெற்றோர் திட்டியதால் மாணவி தற்கொலை!

சென்னையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூரில் ஜி.கே.எம் காலணி பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் பாஸ்கர். இவரது முதல் மகள் வைஜெயந்தி சூரப்பட்டு அருகே உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வாரம் மூன்று நாட்கள் அவர் பள்ளி சென்று வந்த நிலையில் நேற்று பள்ளி சென்றவர் மாலை திரும்பி வராததால் பெற்றோர்கள் அவரை தேடியுள்ளனர்.

இந்நிலையில் கொரட்டூர் அருகே உள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து மாணவி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவர நேரில் சென்று ஆய்வு செய்த போலீஸார் மாணவியின் அடையாள அட்டை மூலமாக அது வைஜெயந்தி என்பதை கண்டறிந்துள்ளனர். வீட்டுப்பாடம் செய்யாததால் பெற்றோர் வைஜெயந்தியை முதல் நாள் கண்டித்திருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.