வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:46 IST)

அதிமுகவினரை வாடகைக்கும் விலைக்கும் வாங்கி ஆட்சி நடத்தும் திமுக - ஈபிஎஸ் விமர்சனம்!

திமுக எம்எல்ஏக்களில் 15 பேர் முன்னாள் அதிமுகவினர் என்று சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனிடையே சமீபத்தில் திமுக அமைச்சர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு சேவை செய்வதாக ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். 
 
இந்நிலையில்,  திமுக எம்எல்ஏக்களில் 15 பேர் முன்னாள் அதிமுகவினர் என்று சுட்டிக்காட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மேலும் அவர் கூறியதாவது, திமுக அரசின் அமைச்சரவையில் இருக்கும் 8 பேர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள்.  திமுக எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் முன்னாள் அதிமுகவினர். 
 
திமுகவில் அனைவரும் வயதாகிவிட்டதால், அதிமுகவில் இருப்பவர்களை வாடகைக்கும் விலைக்கும் வாங்கியிருக்கின்றன. திமுக அரசுககு சரியான தலைமையும் நிர்வாகத் திறமையும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.