புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (08:47 IST)

வாக்கு எண்ணிக்கை நிலவரம்: முன்னிலையில் அதிமுக; ஓவர் டேக் செய்யுமா திமுக?

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதிய்லும் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
 
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண துவங்கப்பட்டது.
 
இந்நிலையில் வாக்குகள் எண்ணிக்கை குறித்த முதல் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. புதுவையில் உள்ள காமராஜ் நகர் தொகுதியிலும், நாங்குநேரி தொகுதியிலும்  திமுக கூட்டணியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதம் துவங்கப்பட்டாலும், முதற் கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் நேரடியாக களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது.