1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK Former MP Sundaram joins DMK

அதிமுக சாதிய கட்சியாக மாறிவிட்டது!? – திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி சுந்தரம்!

Tamilnadu
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படும் நிலையில் அதிமுக பிரமுகர்கள் பலர் திமுகவில் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து எதிர்கட்சியாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கட்சியில் உட்கட்சி பூசல் நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பிரமுகர்கள் சிலர் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இன்று இணைந்த நிலையில் அவரை தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.பி சுந்தரம் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது பேசிய அவர் “அதிமுக சாதிய கட்சியாக மாறிவிட்டது. ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்தான். பதவி கிடைத்தால் போதும் என நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமி சர்வதிகாரியாக செயல்படுகிறார்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது: கனிமொழி எம்பி