திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 ஜூலை 2021 (12:36 IST)

மகேந்திரனால் தான் சிங்காநல்லூரில் தோற்றோம்: குமுறும் சிங்காநல்லூரி திமுகவினர்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட டாக்டர் மகேந்திரனால் தான் திமுக வேட்பாளர் சிங்காநல்லூரில் தோல்வி அடைந்தார் என்றும் அப்படிப்பட்ட மகேந்திரனை திமுகவில் இணைத்துக் கொள்வதா? என்றும் சிங்காநல்லூர் திமுகவினர் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் கமல் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடைய இணைப்பு கொங்கு மண்டல பகுதிகளில் திமுகவுக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் ஏற்கனவே டாக்டர் மகேந்திரன் குறித்து பல்வேறு புகார்களை திமுகவினர் முதல்வரிடம் கூறினார்கள். குறிப்பாக டாக்டர் மகேந்திரனால் தான் சிங்காநல்லூரில் திமுக தோல்வி அடைந்தது என்று கூறினார். ஆனால் அதை முக ஸ்டாலின் நம்பவில்லை என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் டாக்டர் மகேந்திரனை திமுகவில் சேர்த்ததற்கும், அவருக்கு முக்கிய பதவி கொடுப்பதற்கும் சிங்காநல்லூர் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.