1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஜூலை 2021 (11:18 IST)

தமிழ்நாட்டில் கொங்கு நாடு; தீவிர பரிசீலனை! – பகீர் கிளப்பும் கரு.நாகராஜன்!

தமிழகத்தில் கொங்கு நாடு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக கரு.நாகராஜன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை கொண்ட கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக நேற்றைய தினசரியில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலான நிலையில், தமிழகத்தை பிரிக்க முடியாது என திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கூறியிருந்தனர்.

இந்நிலையில் கொங்கு நாடு சர்ச்சை குறித்து பேசியுள்ள பாஜக தமிழக பொது செயலாளர் கரு.நாகராஜன் “தமிழகத்தில் கொங்கு நாடு குறித்த பரிசீலனை தொடக்க நிலையில் உள்ளது. அந்த பகுதி மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்ய வேண்டியது அரசின் கடமை” என கூறியுள்ளார்.