செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2023 (16:40 IST)

'ரோகிணி தியேட்டர் சேதம்', 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி குளறுபடி பற்றி நீதிபதி கருத்து

lero trailer, ar rahman , vijay
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், ஆகிய படங்களை அடுத்து இயக்கியுள்ள படம் லியோ.

இப்படத்தை தியேட்டரில் காண்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள டிரைலர் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னட ஆகிய மொழிகளில்  நேற்று மாலை சன் டிவி யூடியூப்  பக்கத்தில்  வெளியாகியானது.

இந்த டிரைலர் சென்னை ரோகினி தியேட்டரில் சிறப்பு காட்சியாக   நேற்று திரையிடப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.   லியோ டிரைலர் 6:30 மணிக்கு ரிலீசான நிலையில் லியோ டிரைலர் சிறப்பு காட்சியின் போது ரோகிணி திரையரங்கில் இருக்கைகளை விஜய் ரசிகர்கள் சேதப்படுத்தினர்.

இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலானது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும்  கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,  லியோ படத்தின் டிரெயிலர் திரையிடலின்போது ரோஹினி தியேட்டர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் காவல்துறையின் தவறான கையாளுதலே காரணம் என்று, ரசிகர்களுக்கு முறையாக அனுமதி வழங்கி, கையாண்டிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற   நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றபோது, பல்வேறு குளறுபடிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.