திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (21:07 IST)

சூடு பிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலை நிறுத்த திமுக தொடுத்த வழக்கு வழக்கின் தீர்ப்பில் புதிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வது, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் சற்று முன்னர் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது
 
ஜெயலலிதா இருந்தவரை எந்த தேர்தலிலும் முதலில் வேட்பாளர்களை அறிவிக்கும் வழக்கத்தை கொண்ட அதிமுக தற்போது அதையே பின்பற்றி வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலின்படி முதல்கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. மேலும் மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
முதல்கட்டமாக தேனி, கிருஷ்ணகிரி, அரியலூர், சேலம், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது