SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
வாக்காளர் சீர்திருத்தப் பணிகளான SIR கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்த சீர்திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தமிழ்நாட்டில் இதுவரை 6.3 லட்சம் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த தீவிரத் திருத்த பணியின் விளைவாக, சுமார் 70 லட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர கணக்கெடுப்பு படிவங்களை பெற்றவர்கள், இன்று மாலைக்குள் அவற்றை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அப்போதுதான் அவர்களுடைய வாக்குகள் உறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், இன்று படிவங்களை அளிக்க கடைசி நாள் என்ற சூழலில், பொதுமக்களின் வசதிக்காக சமர்ப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளால் எழுப்பப்பட்டு வருகிறது. எனவே, வாக்காளர் படிவங்களை சமர்ப்பிக்கும் தேதி நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva