1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna says tvk destroyed bjp in tn

பாஜகவை காலி பண்ணதே நாங்கதான்!.. இல்லனா இதுதான் நடந்திருக்கும்!.. ஆதவ் அர்ஜுனா பேட்டி...

adhav arjuna
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்து விஜய் முதலமைச்சராகிவிட்டார். 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீத வாக்குகளை பெற்றது. அதாவது, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, விடுதலை சிறுத்தைக் கட்சி போன்ற கட்சிகளின் வாங்கு வங்கி கடுமையாக சரிந்துவிட்டது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக 2026 தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. விஜய் தவெகவை தொடங்கிய போதே பாஜக தனது கொள்கை எதிரி என அறிவித்துவிட்டார். அதேநேரம், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அக்கட்சியுடன் இணக்கமாக சென்று தமிழகத்திற்கு தேவையான நிதிகளை பெற்றுவிட வேண்டும் என அவர் நினைக்கிறார். எனவே, பாஜகவை தவெக அமைச்சர்கள் விமர்சிப்பது இல்லை. இதை கையிலெடுத்த திமுக தவெக பாஜகவை பார்த்து பயப்படுகிறது.. பாஜகவுக்கு அடிமையாகிவிட்டது என பேசி வருகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘தவெகவால்தான் 4 சீட்களில் இருந்த பாஜக இப்போது ஒரு சீட்டில்  சுருங்கியிருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்கவும் இல்லை.. எதிர்க்கவும் இல்லை.. சித்தாந்த ரீதியில் பாஜக எங்களின் எதிரிதான்.. 2026-ல் தவெக மட்டுமில்லையென்றால் திமுக மீதான வெறுப்பில் அதிமுக - பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும்.. அதை தடுத்தது தவெகதான்’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எல்லாரும் அவர் பின்னாடி போறீங்க!.. வயிறு எரியுது!.. ஆர்.எஸ்.பாரதி கோபம்!...