வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2016 (20:55 IST)

இது ஜெயலலிதாவிற்கு கண் திருஷ்டி : நடிகை சரோஜா தேவி பேட்டி

இது ஜெயலலிதாவிற்கு கண் திருஷ்டி : நடிகை சரோஜா தேவி பேட்டி

பல சாதனைகள் படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது ஒரு கண் திருஷ்டிதான் என்று பழம்பெரும் நடிகை சரோஜா தேவி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு மாதத்திற்கும் மேல், சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரது உடல் நலம் பற்றி விசாரிக்க பல அரசியல் தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
 
இந்நிலையில், பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று அப்பல்லோவிற்கு வந்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது “முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். அவருக்கு இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு கண் திருஷ்டி. அவ்வளவுதான். 
 
அவர் பூரண நலம் பெற்று மக்களை சந்திப்பார். அவர் பல சாதனைகள் நிகழ்த்திய பெண்மணி. அவரைப் போல் ஒரு பெண்மணி தமிழகத்தில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை. 
 
நான் அப்பல்லோ மற்றும் லண்டன் மருத்துவர்கள் அனைவரிடமும் பேசினேன். அவர் நலமாக இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று அவர் கூறினார்.