தர்மதுரை படத்தை பாராட்டிய மு.க.ஸ்டாலின் : இயக்குனருக்கு கடிதம்

தர்மதுரை படத்தை பாராட்டிய மு.க.ஸ்டாலின் : இயக்குனருக்கு கடிதம்

திங்கள், 31 அக்டோபர் 2016 (20:18 IST)
இயக்குனர் சீனுராமசாமியின் இயக்கத்திலும், நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பிலும் உருவான படம் தர்மதுரை. 


 

 
இந்தப்படம் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பலரையும் கவர்ந்தது. விஜய் சேதுபதிக்கு வெற்றிப்படமாக இது அமைந்தது.
 
இந்நிலையில், தி.மு.க. பொருளாலர் மு.க.ஸ்டாலின் அப்படத்தை பார்த்து, ரசித்து, படத்தின் இயக்குனர் சீனு ராமசாமிக்கு 4 பக்க கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில் “தாங்கள் உருவாக்கிய தர்மதுரை திரைப்படத்தை பார்த்தேன்.  மக்கள் பேராதரவுடன், பல திரைப்படங்களில் 50 நாட்களுக்கும் மேல் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியது. இப்படம் சமூக நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 


 

 
கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை வரிகளில், யுவன்சங்கர் ராஜா இசையிலான பாடல், ‘ஆண்டிப்பட்டி கணவாய் காத்து ஆளைத்தூக்குதே’ என்ற பாடலும் இசையும் இதயததில் இன்னிசை ராகம் பாடிக் கொண்டே இருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்பகளை ஏற்று அற்புதமான ‘தர்மதுரை’ படத்தை உருவாக்கியவர் சீனு.ராமாசமி. அவருக்கு வாழத்துக்கள். மென்மேலும் சமூக சீர்திருத்தப் படங்களை அவர் தர வேண்டும்‘ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

அதிமுகவில் பதவி கேட்டவர்தான் ஆதவ் அர்ஜுனா!.. பழசெல்லாம் மறந்துபோச்சா!.. ஓ.எஸ்.மணியன் பேட்டி!..

மோடியால் பொருளாதார புயலில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாது!.. ராகுல்காந்தி பகீர்!..

நீட் வினாத்தாள் கசிவில் கைதானவருக்கு 8 ஏக்கரில் பள்ளி கல்லூரி.. சிபிஐ விசாரணையில் அம்பலம்..!

ஆதரவளித்த 25 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை: தவெக அதிரடி முடிவு..!

Dialer Appஐ மாற்றும் கூகுள்.. இனி ஒரே இடத்தில் நார்மல், வாட்ஸ் அப், கூகுள் மீட் call historyஐ பார்க்கலாம்..

அடுத்த கட்டுரையில்
Show comments