1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (09:50 IST)

சென்னையில் 23 வயது இளம் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!

சென்னையில் 23 வயது இளம் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!
சென்னையில் 23 வயது இளம் நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பத்மஜா என்ற 23 வயது துணைநடிகை ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு நேற்று முழுவதும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாகப் பார்த்த போது நடிகை பத்மஜா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது 
 
இதுகுறித்து உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பத்மஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் 
 
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் பத்மஜா ஒரு வீடியோவை பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோவில் கண்ணீர் விட்டு அழுத படியே தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ அடங்கிய செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
பத்மஜாவுக்கு பவன் என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார். கடந்த மாதம் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து குழந்தையுடன் பவன் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நடிகை பத்மஜா தனது உறவுக்கார வாலிபர் ஒருவருடன் தங்கியிருந்ததாகவும், அதனை கண்டித்த வீட்டின் உரிமையாளர் கணவருடன் தங்குவதற்கு மட்டுமே வீடு என்றும் உறவுக்காரருடன் தங்குவதற்கு வீடு கிடையாது என்றும் உடனடியாக காலி செய்யுமாறு கூறியதாகவும் இதனையடுத்தே பத்மஜா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது