1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (15:26 IST)

பிரதமருக்கு நன்றி கடன் செலுத்த தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்கள்: நடிகை நமிதா

பிரதமர் செய்த பல சாதனைகளுக்கு நன்றி கடன் செலுத்த தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என நடிகை நமிதா தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதும் திமுகவுக்கு ஓட்டு கேட்டு கருணாஸ், அதிமுகவுக்கு ஓட்டு கேட்டு கஞ்சா கருப்பு, பாஜகவுக்கு ஓட்டு கேட்டு நமிதா உள்பட பலர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல் முருகனை ஆதரித்து நடிகை நமீதா இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியபோது, ‘ கடந்து பத்து வருடங்களில் நமது பாரத பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் உலகமே மிரண்டு கொண்டிருந்த நேரத்தில் இலவச தடுப்பூசி அழைத்து நாட்டை காப்பாற்றியவர் நமது பிரதமர் என்றும் தெரிவித்தார்

நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியவர் என்றும் இது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்த பிரதமருக்கு நன்றி கடன் செய்ய அனைவரும் தாமரை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என்றும் அவர் பேசினார்.


Edited by Siva