1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (14:39 IST)

பூனையை காப்பாற்ற அடுத்தடுத்து கிணற்றில் குதித்த 5 பேர் பரிதாபமாக பலி.. சோக சம்பவம்

பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் பூனை ஒன்று தவறி விழுந்த நிலையில் அதைக்காப்பாற்ற கிணற்றிற்குள் குதித்த நபர் உள்ளே சிக்கிக் கொண்டார்
 
இதையடுத்து அவரை வெளியில் தூக்க உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக நான்கு பேர் கிணற்றில் குதித்த நிலையில், முதலில் பூனையை காப்பாற்ற குதித்தவரும், அவரை காப்பாற்ற குதித்த நான்கு பேர் என மொத்தம் ஐவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்
 
விஷவாயு தாக்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஐவரின் உடல் பரிசோதனைக்கு பின் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 
Edited by Siva