1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (16:11 IST)

420 பாஜக இந்த முறை 270ஐ தாண்டாது: அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்த காயத்ரி ரகுராம்!

பாஜகவில் இருந்து சமீபத்தில் அதிமுகவுக்கு சென்ற நடிகை காயத்ரி ரகுராம் 420 பாஜக இந்த முறை 270ஐ தாண்டாது என்று பிரச்சாரத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த தேர்தலில் பாஜக கொடுத்த வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை என்றும் மக்களுக்கு அதிருப்தியாக தான் அந்த ஆட்சி உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினால் தான் நான் உள்பட பலர் வெளியேறினார்கள் என்றும் இப்போது கூட சில பாஜக தலைவர்கள் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளிகளாக தான் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களின் பெரும் வெறுப்பையும் அதிருப்தியையும் சம்பாதித்துள்ள பாஜக இந்த முறை 270 தொகுதிகளை கூட தாண்டாது என்றும் கண்டிப்பாக பாஜக கட்சி மீண்டும் ஆட்சி அமைக்காது என்றும் அவர் கூறினார்.

மதுரையை பொருத்தவரை அதிமுக வேட்பாளர் சரவணன் வெற்றி பெறுவார் என்றும் அவருக்காக நான் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறேன் என்றும் அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம் தற்போது பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran