வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (08:16 IST)

அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ? பாஜகவில் இணைந்த விஜயதரிணி புலம்பல்..!

vijayadharani
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த விஜய் தரணி திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் பாஜக வேட்பாளர் பட்டியலில் விஜய் தரணி பெயர் இல்லாதது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை இருந்தது என்றும் மக்களவை சீட்டு தருகிறோம், மாநிலங்களவை உறுப்பினர் ஆக்குகிறோம் என்று ஆசை காட்டி தான் பாஜக அவரை இழுத்ததாகவும் தற்போது அவரை பாஜக தலைமை கண்டு கொள்வதே இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவர் தனது ஆதரவாளர்களிடம் அவசரப்பட்டு விட்டோமோ என்று கூறி வருவதாகவும் கமலாலயம் சென்றால் தனக்கு உட்கார கூட சீட் கூட இல்லை என்றும் தலைவரை சந்திக்க சென்றால் பார்வையாளரோடு பார்வையாளர்கள் தான் உட்கார வைத்துவிட்டு அனுப்பி விடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்

ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவருக்கு என்று ஒரு படைபலம் இருந்ததாகவும் மாநில தலைவர் அறைக்கு கூட அவர் அப்பாயின்மென்ட் இல்லாமல் செல்லும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருந்ததாகவும் அவர் தனது நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva